NAIDU SEVA TRUST

நாயுடு சேவா அறக்கட்டளை

M. ரவிச்சந்திரன் அவர்கள் 1964 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ம் தேதி திரு V . முத்துசாமி என்பவருக்கு மகனாக பிறந்தார். இவரது சொந்த ஊரான கோயம்புத்தூரில் உள்ள PRICOL நிறுவனத்தில் 35 ஆண்டுகள் தனது பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார். பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். தமிழகத்திலுள்ள அனைத்து நாயுடுகளை பற்றி நன்கு அறிந்தவர்.

அவர் தான் மேற்கொண்டிருக்கும் சமுதாய பணிகளைப் பற்றி விவரிக்கையில், 50 ஆண்டுகளுக்கு முன்பாக நமது நாயுடு சமுதாயம் அனைத்து விதத்திலும் முன்னோடியாக இருந்த நிலை மாறி தற்பொழுது மிகவும் பின்தங்கியுள்ளோம். ஆகையால் என்னுடைய முயற்சியில் அனைத்து நாயுடுகளையும் ஒன்றிணைத்து ஒற்றுமையாக செயல்பட செய்வதுடன், திருமணம் ஆகாதவர்களுக்கு அவரவர்களுக்கு ஏற்ற மாதிரி வரன்களை தேர்வு செய்ய உதவியாக இருப்பேன். மேலும் நான் பல ஆண்டுகளாக அன்னதானம் அளித்து வருவதுடன், மக்களுக்கு தேவையான கல்வி, மருத்துவம், தொழில், வியாபாரம் ஆகியவற்றிக்கு ஆலோசனை தந்து வருகிறேன். நமது சமுதாயத்தில் விருப்பமுள்ளவர்களை சேர்த்து குழுக்களாக அமைத்து எனது பணிகளை மேலும் சிறப்புடன் நடத்த, என்னுடன் இணைந்து செயல்பட நமது சமுதாயத்தை சார்ந்த அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.